சென்னை: பிரியாணியில் இல்லையே பீஸு கடைக்காரன் கேக்குறான் காஸு.. என்று திமுகழகத்தின் அவைக் கவிஞர் திராவிடப் பிதற்றல் வைரமுத்து கண்ணீர்க் கவிதை எழுதும் ரேஞ்சுக்கு போய்க் கொண்டிருக்கிறது இன்றைய திமுக.,வுக்கு எதிரான டிவிட்டர் ட்ரெண்டிங்.
கோபேக் மோடி என டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து எப்போது திமுக.,வினர் போட்டு டிவிட்டரை நாறடித்தார்களோ அன்று முதல் வாரம் ரெண்டு மூணு டிவிட்டர் கலாய்த்தலையாவது கர்ம சிரத்தையாக பிறவிக்கடன் என ஆக்கிக் கொண்டிருக்கின்றனர் மறு தரப்பினர். அதன் இன்றைய பரிணாமமாக உருவான டிவிட்டர் ட்ரெண்ட் தான் #ஓசிபிரியாணிதிமுக
பிரியாணி கடையில் பிரியாணி கேட்டுப் போய், தகராறில் ஈடுபட்டு, கடை உரிமையாளரைத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, தாக்குதலில் ஈடுபட்ட நபர் யுவராஜ் என்றும், அவர் பாக்ஸிங் பாணியில் முகத்தில் ஓங்கி குத்திக் கொண்டே இருக்க… இவற்றை வைத்து இன்றைய டிவிட்டர் ட்ரெண்டிங் செய்துள்ளனர். அவர் திமுக.,வில் இப்போது உள்ளார் என்றும், முன்னர் த.மா.காங்கிரஸில் இருந்தார், பின்னர் பாஜக.,வுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் யுவராஜ் குறித்த கதைகள் டிவிட்டரில் பதியப் பட்டாலும், ட்ரெண்ட் ஆனது என்னவோ திமுக.,வை வைத்துதான்!
இதற்காக, #வயிறுமுத்து #ஓசிபிரியாணிதிமுக எழுதியது போன்று
பிடர்கொண்ட சிங்கமே பேசு
பிரியாணியில் இல்லையே பீஸு
கடைகாரான் கேக்குறான் காசு#வயிறுமுத்து#ஓசிபிரியாணிதிமுக pic.twitter.com/2ehIpRVEBz
— சோழன் (@thiruneeru) August 1, 2018
கருணாநிதி உடல் நலமின்றி மருத்துவமனையில் உள்ளார். இதை சாக்காக வைத்து விருகம்பாக்கம் சேலம் “R.R அன்பு பிரியாணி” கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்ஸிங் சண்டை போடும் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி #யுவராஜ் தலைமையில் 10 பேர் போடும் சண்டையை பாருங்கள் pic.twitter.com/OyqbQnbHBV
— ராஜ்குமார் .ரா (@SeemanThampi007) August 1, 2018
இந்திய அளவிலும் இதுதான் இப்போ Trending!#ஓசிபிரியாணிதிமுக pic.twitter.com/PjfZIgyMfh
— வதந்தி டிவி – Vathanthi TV (@VathanthiTv) August 1, 2018
நான் ஒன்னும் எனக்காக பிரியாணி கேக்கல ?#ஓசிபிரியாணிதிமுக ?#ஓசிபிரியாணிதிமுக ?#ஓசிபிரியாணிதிமுக ? pic.twitter.com/lYQrkg2Epm
— தமிழ் மகன் (@Thamizmagan82) August 1, 2018
தகராறில் ஈடுபட்டவர்கள் ஆறு மாதம் முன் இந்து முன்னணியிலிருந்து சேர்ந்தவர்கள். அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்: மா சுப்ரமணியன். #ஓசிபிரியாணிதிமுக @Deva_ICL @samprdp @News18TamilNadu
— Saradha V (@sara_reports) August 1, 2018
ஆனால், நாங்கள் கடையை மூடப் போகிறோம்… பிரியாணி இல்லை சார்.. என்று ஓட்டல் முதலாளி கூறியதாகவும், அதற்காக அவரைத் தாக்கியதாகவும், திமுக., தரப்பில் இருந்து பதியப் படுகிறது… `கடையைப் மூடப்போறோம்… பிரியாணி இல்ல சார்’ – ஹோட்டல் ஓனரை தாக்கிய `பாக்ஸிங்’ கும்பல் | National Trending no 1 #ஓசிபிரியாணிதிமுக




