ஒரு பிளேட் ஓசி பிரியாணிக்கு ஆசைப் பட்டு… ஒழுங்கு நடவடிக்கையை சந்தித்தவர்..!

Published:

yuvaraj dmk stalin - 2026

சென்னை: விருகம்பாக்கம் சேலம் ஆர்..ஆர் அன்பு பிரியாணி கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்சிங் சண்டை போடும் விருகம்பாக்கம் திமுக., தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10 பேர் போடும் சண்டையைப் பாருங்கள் என வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே,  சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப் படுகிறார்கள்..- என்று க.அன்பழகன் பெயரிட்டு அறிவிப்பு வெளியானது.

இருப்பினும் டிவிட்டர் பதிவுகளில் பலரும் விட்டு விளாசி வருகிறார்கள். தேசிய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த டிரெண்டிங் டிவீட் இன்று இதுதான் …

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img