
மதுரை – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக மதுரை மற்றும் செங்கோட்டை பயணிகள் ரயில் மதுரை – விருதுநகர் இடையே ரத்து செய்யப் பட்டுள்ளது.
மதுரை – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக மதுரை மற்றும் செங்கோட்டை பயணிகள் ரயில் மதுரை – விருதுநகர் இடையே (22.10.2018 TO 31.10.2018) 10 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, வண்டி எண். 56734, மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில், விருதுநகர் வரை இயக்கப்படும்.
செங்கோட்டை – 11.50 AM, தென்காசி – 12.05 PM, கடையநல்லூர் – 12.25 PM, விருதுநகர் – 02.30 PM
வண்டி எண். 56735, செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில், விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.
விருதுநகர் – 06.05 PM, கடையநல்லூர் – 08.15 PM, தென்காசி – 08.50 PM, செங்கோட்டை – 09.15 PM
குறிப்பு: வண்டி எண். 56735, செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில், செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் சிலம்பு எக்ஸ்பிரஸ் விருதுநகர் வந்த பின்பு புறப்படும்.



