டென்மார்க் ஓபன் பேட்மின்டன்: வெள்ளி பதக்கம் வென்றார் சாய்னா

விளையாட்டு

01 Oct22 dhin Saina - 2026

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் போராடி தோற்ற இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை டாய் ட்ஸூ யிங்குடன் நேற்று மோதிய சாய்னா 13-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 21-13 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் தொடக்கத்தில் இருந்தே கடும் நெருக்கடி கொடுத்த டாய் ட்ஸூ யிங் 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்துடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் சீரிஸ் பைனலுக்கு முன்னேறி இருந்த சாய்னா, இம்முறை வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். சாய்னாவுடன் 18 முறை மோதியுள்ள டாய் ட்ஸூ யிங் அதில் 13-5 என முன்னிலை வகிக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.