சென்னை: சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்ததாக நேற்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த படி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்குள் விசாரணை நடத்திட சிபிஐ-க்கு அனுமதி அளித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஐ.ஜி.பொன்மாணிக்க வேலின் விசாரணையில் நம்பிக்கை இல்லை, ஒரு வருடமாக வழக்கில் முன்னேற்றம் இல்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடையே சில சந்தேகங்கள் எழுந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. சிபிஐ., விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டும் இந்த வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு விடுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.
பொன்.மாணிக்கவேலை பணி இட மாற்றம் செய்வதிலும், பொன் மாணிக்கவேலை இந்த விசாரணையில் இருந்து கழற்றி விடுவதிலுமே அரசு குறியாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஆதரவாக கருத்து தெரிவித்ததும், அவரை விசாரணையில் இருந்து மாற்ற இயலாது என்ற சூழ்நிலையில், சிபிஐ வசம் இந்த வழக்கின் விசாரணையை ஒப்படைத்துள்ளது தமிழக அரசு என்றே கருதமுடிகிறது.
சிபிஐ விசாரணை என்பது இப்போதெல்லாம் வெறும் கண் துடைப்பாக மட்டுமே பார்க்கப் படுகிறது. சிபிஐ விசாரித்து வந்த வழக்குகளில் பெரிய அளவில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர இயலவில்லை.
குறிப்பாக, மோடி ஆட்சிக்கு வந்த இந்த 4 வருடங்களில் சிபிஐ என்பது, அரசின் வேகத்துக்கு ஈடு கொடுத்து விசாரணையை நடத்திமுடித்ததாக ஒரு வழக்கைக் கூட உறுதியாகக் காட்ட இயலவில்லை.
ராமஜெயம் வழக்கு சிபிஐ வசம்தான் உள்ளது. வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை..
2 ஜி வழக்கில் சிபிஐயை சவுக்கால் விளாசியது. பல வருடமாக ஆதாரம் சமர்ப்பிக்காமல் அதோ இதோ என ஒவ்வோரு முறையும் செட்டி நாட்டு சீமான் சிதம்பரம் மிக எளிதில் முன்ஜாமீன் பெறுகிறார். அவருக்கு மட்டும் நீதிமன்றங்கள் எப்படியோ ஜாமீன் கொடுத்து விடுகின்றன. நீங்க நாட்கள் அவகாசம் கொடுத்து கைது
சேலம் ரயில் கொள்ளை(7.5 கோடி பழைய நோட்டு) வழக்கு இன்னமும் போலீசார் வசமிருக்கிறது.. இதை சிபிஐ யிடம் மாற்றுங்கள் என யாரும் கேகவில்லை. நிலைமை இப்படி இருக்க சிபிஐக்கு மாற்றம் என்பது அரசாங்கம் தன் குடையின் கீழ் உள்ள கருப்பு ஆடுகளை காப்பாற்ற முயற்சிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி…
ஒரு விவகாரத்தை ஆறப்போட கமிஷனை போடு என்பது புதிய பழமொழி!




