இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றி இருப்பதை எதிரணி தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோரூப் 80 ரன்னும், பேர்ஸ்டோவ் 70 ரன்னும், ஜென்னிஸ் 42 ரன்னும் எடுத்தனர்.
இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வின் மிகவும் சிறந்த பவுலர். அவரது பந்து நன்கு திரும்பும் ஆடுகளத்தில் நிறைய பந்துகள் விக்கெட்டை வீழ்த்தும் வகையில் இருக்கும் என்றார்.



