ஜிம்பாப்வே தேர்தல் வன்முறை: அமைதியாக இருக்க ஐநா வலியுறுத்தல்

உலகம் சற்றுமுன்

09 August01 Ziambabawe - 2026ஜிம்பாப்வே நாட்டில் நடந்த தேர்தலில் ஆளும் சானு பி.எஃப் கட்சி அதிக நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக இன்னும் முழுமையாக வெளியாகாத அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆளும் ஜானு-பிஎஃப் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, போராட்டக் காரர்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் அவையும், பிரிட்டனும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்திருக்கின்றன.

அரசுத் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் கொல்லப்பட்டனர்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில், ஜிம்பாப்வே அரசியல்வாதிகள் நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டும் என்று ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியோ கட்டர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஹாரியட் பால்ட்வின், இந்த வன்முறையால் ‘ஆழ்ந்த கவலை’ அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.