தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வருகிற 5-ந்தேதி கண்டியில் நடக்கிறது.



