சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் ஒரு பக்க சாலையை மூடியது போலீஸ். அந்தப் பகுதியிலும் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டுள்ளனர்.
திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்த அடுத்த அறிவிப்பு இரவு 11 மணிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில், அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க, போலீஸார் அதிக அளவில் காவேரி மருத்துவமனை பகுதியில் குவிக்கப் பட்டுள்ளனர்.
காவேரி மருத்துவமனை அமைந்துள்ள சாலை மூடப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது!
காவேரி மருத்துவமனைக்கு கட்சித் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும், தொண்டர்களும் அதிக அளவில் மருத்துவமனை அருகே குவிந்திருப்பதால், போலீஸார் உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.




