புது தில்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.கே.தவான் திங்கள்கிழமை இன்று மாலை தில்லியில் காலமானார். அவருக்கு வயது 81.
ரஜீந்தர் குமார் தவான், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். 1962க்குப் பின்னர் இந்திரா காந்தியின் தனிப்பட்ட உதவியாளராகத் திகழ்ந்தவர்.
1984ல் இந்திரா காந்தி சுடப்பட்டு உயிரிழக்கும் நாள் வரையில் இந்திரா காந்தியின் உதவியாளராக விளங்கினார். 1975 – 77ல் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப் பட்டிருந்த போது, பிரதமரின் நெருங்கிய வளையத்தில் ஒருவராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அம்பிகா சோனி, கமல் நாத், தவான் மூவரும் இந்திரா காந்தியுடன் நெருக்கமாக இருந்தனர்.




