சென்னை: கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் அறிக்கையுடன் கூடிய செய்தி வெளியானதும் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு என்ற காவேரி மருத்துமனையின் அறிககி குறித்த செய்தி வெளியானதும் சென்னை நகரிலுள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு மக்கள் படையெடுத்துள்ளனர். கடைகளை மொய்த்த மக்கள், அடுத்த சில நாட்களுக்குத் தேவையான காய்கறிகள் மளிகைப் பொருள்களை வாங்கிவைக்கத் துவங்கினர்.
இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள் திடீர் விலையேற்றம் கண்டன. பால், தயிர் உள்ளிட்ட அன்றாடப் பொருள்களை அதிக அளவில் வாங்கிச் சென்றதால், சில பொருள்களுக்குத் தட்டுப் பாடு ஏற்பட்டது.
மாலை நேரமே திடிரெனப் பரபரப்பு கூடியதால், டாஸ்மாக் விற்பனையகங்களில் திடீர் நெரிசல் ஏற்பட்டது. தேவையான சரக்குகளை போட்டி போட்டு பலரும் வாங்க முண்டியடித்தனர். இந்நிலையில் மாலை திடீர் என வந்த வாய்மொழி உத்தரவை அடுத்து, டாஸ்மாக் கடைகள் பல அடைக்கப் பட்டன.




