சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினை சந்தித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நலம் விசாரிக்க வந்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, சென்னைக்கு வந்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அவர் இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். திமுக., செயல் தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தார்.
மாலை 6.30 மணி அளவில் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி வயது காரணமாக மருந்துகளை ஏற்பதில் உடல் சுணக்கம் காட்டுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும் என்றும் கூறப்பட்டது.
இதை அடுத்து காவேரி மருத்துவமனை பகுதியில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.




