சென்னை: உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் மு.கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று மாலை 6.30க்கு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர், நிலைமை சற்று மோசம் அடைந்தது.
கருணாநிதி உடல் நலம் குறித்த தகவலைக் கேட்டதும், மருத்துவமனைக்கு தி.மு.க.வின் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தனர். அவர்களின் முகங்கள் மிகவும் தொங்கிப் போய், சோகம் அப்பிக் கொண்டிருந்தது.
கடந்த வாரம் இருந்த உற்சாகமும் தெம்பும் திமுக.,வினரின் முகங்களில் காணாமல் போயிருந்தது. மருத்துவமனையை விட்டு வெளியே வந்த கட்சியின் மூத்த தலைவர்கள், நம்பிக்கை இழந்த நிலையில் பேசியதால், தொண்டர்கள் வேகமாக தகவல்களைப் பரப்பிக் கொண்டிருந்தனர். இதனால், சென்னையை நோக்கி பல்வேறு ஊர்களில் இருந்தும் திமுக,. தொண்டர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சென்று துரைமுருகன் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக வெளியான தகவலால், திடீர் பரபரப்பு கூடியது.





What happened