சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப் பட்ட திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனையே அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், தமிழகமெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
இன்று மாலை 6.30க்கு காவேரி மருத்துவமனை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் திமுக.,வினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக எதுவும் இடம்பெறவில்லை. எனவே தொண்டர்கள் சோகம் அடைந்தனர்.
கடந்த வாரம் மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவில் திரண்டிருந்த தொண்டர்கள், ஓரிரு நாள்கள் கழித்து, கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுளளதாகக் கூறப்பட்டதால், சமாதானம் அடைந்து கலந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று திடீரென மருத்துவமனை அறிக்கை வெளியானதால், திமுக தொண்டர்கள் சோகம் அடைந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் திமுக., தொண்டர்கள் சென்னையை நோக்கி விரைந்துள்ளனர். கடந்த வாரம், கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரவிய போது, உணர்ச்சி வசப்பட்ட சென்னை கொளத்தூர் தொகுதி திமுக.,வினர் கார் கண்ணாடிகளை அடித்தும், கற்கள் வீசியும், ஏடிஎம், இயந்திரத்தை உடைத்தும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், இன்று உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் விரைவாகப் பரவியதால் தொண்டர்கள் சென்னையில் கூடி வருகின்றனர். இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை போலீஸார் விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், தங்கள் பணிமனை பேருந்துகளை வெளியூர்களில் இரவு நேரங்களில் நிறுத்திவிட்டு தங்க வேண்டாம் என்று ஓட்டுநர், நடத்துனர்களை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் பல கேட்டுக் கொண்டன. இதனால் பல பேருந்துகள் பணிமனையை நோக்கி திருப்பப் பட்டன.
இந்நிலையில் அசாதாரண சூழல் நிலவுவதால், பொதுமக்கள் இரவுப் பயணங்களை மேற்கொள்வது நல்லதல்ல என்று பலரும் தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அறிவுறுத்தியபடி இருந்தனர்.





எத௠நடநà¯à®¤à®¾à®²à¯à®®à¯ அத௠விதிபà¯à®ªà®Ÿà®¿ நடகà¯à®•à¯à®®à¯.
அதனால௠பொத௠மகà¯à®•ள௠பாதிகà¯à®•பà¯à®ªà®Ÿà®•à¯à®•ூடாதà¯.
தொணà¯à®Ÿà®°à¯à®•ள௠அமைதியான à®®à¯à®±à¯ˆà®¯à®¿à®²à¯ நடநà¯à®¤à¯ கொளà¯à®³ வேணà¯à®Ÿà¯à®®à¯.
அதà¯à®µà¯‡ தலைவரà¯à®•à¯à®•௠செலà¯à®¤à¯à®¤à¯à®®à¯ மரியாதை.