சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்ட இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமின் வழங்கியது.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட கவிதா, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
கவிதாவின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள், கவிதா, திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; தேவைப்படும்போது கும்பகோணத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; சாட்சிகளை கலைக்கக் கூடாது; விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று கூறி நிபந்தனை ஜாமின் வழங்கினர்.




