செங்கோட்டையில் பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா வருகையை முன்னிட்டு அனைத்து இந்து சமுதாய தலைவர் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.
செங்கோட்டையில் திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய
செயலாளர் எச்.ராஜா கலந்து கொள்வதை முன்னிட்டு,
செங்கோட்டை அனைத்து இந்து சமுதாய தலைவர்
ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு விழாக்குழு தலைவர் குருசாமி தலைமை வகித்தார். சீனிவாசன் வரவேற்றார். பாஜ
நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன், திருக்கோயில் திருமடங்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோயில் கொடை விழாவில் இரவு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும்.
10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி, வில்லுபாட்டிற்கு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை
கூட்டத்தில் அனைத்து இந்து மக்களும் குடும்பத்துடன்
கலந்து கொள்ள வேண்டும். அனைத்து இந்து சமுதாய
மக்களும் ஒற்றுமையுடன் செயல்பட ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



