சென்னை: சென்னையில் காலமான முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதியின் உடல் எங்கே நல்லடக்கம் செய்யப் படும் என்பது குறித்து பேசப் பட்டு வருகிறது.
சென்னை மெரினாவில், அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கும் சமாதி எழுப்பப் பட வேண்டும் என்று திமுக.,வினரும் கருணாநிதி குடும்பத்தினரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக., அமைச்சர்களும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ராஜாஜி, காந்தி மண்டபம், காமராஜர் நினைவகம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயலவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, உடல் அடக்கம் எந்த இடத்தில் என்பது குறித்து
தமிழக அரசு இதுவரை எங்களிடம் தகவல் தரவில்லை என திமுக.,வின் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.




