சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரீ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு காலமான திமுக., தலைவர் மு.கருணாநிதியின் உடல் கோபாலபுரத்துக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. இதற்காக கோபாலபுரம் இல்லம் தயாராகி வருகிறது. மேலும், கனிமொழியின் சி.ஐ.டி காலனி இல்லத்திற்கு நாற்காலிகள் கொண்டு வரப்பட்டன,
தி.மு.க எம்.எல்.ஏக்கள் கோபாலபுரம் வரத் தொடங்கியுள்ளனர், தி.மு.க முக்கிய நிர்வாகிகளும் கோபாலபுரம் வந்து கொண்டிருக்கின்றனர். சி.ஐ.டி காலனி மற்றும் கோபாலபுரம் கலைஞர் வீட்டு வளாகத்தில் மின்விளக்குகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
இறுதி மரியாதைக்காக ஹால் அரங்கம் தயாராகி வருகிறது. இரவு 1 மணி வரை அவரது உடல் கோபாலபுரத்தில் வைக்கப் பட்டிருக்கும் என்றும், பின்னர் 3 மணி வரை சிஐடி., காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப் பட்டிருக்கும் என்றும், அதன் பின்னர் அதி காலை 4 மணி அளவில் ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப் பட்டு, தலைவர்கள் தொண்டர்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.




