சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10க்கு காலமான திமுக., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திராவிட முன்னேற்றக் கழகத்
தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான திரு. மு. கருணாநிதி அவர்கள், மூப்பின் காரணமாக காலமாகி யுள்ளார். அவரது மறைவுக்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.




