சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து பலத்த விவாதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மூப்பின் காரணத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலமான திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கே அமையவேண்டும் என்பது குறித்து தற்போது திமுக.,வினரிடம் பலத்த விவாதம் ஏற்படுள்ளது.
மறைந்த திமுக., தலைவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதுதான் சரியானது என்று குடும்பத்தினரும் தலைவர்கள் சிலரும் கோரிக் கொண்டிருக்க, தமிழக அரசோ, வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் இடம் ஒதுக்க இயலாது என்று கை விரித்தது. மேலும், சென்னை அடையாறு காமராஜர் நினைவு மண்டபம் அருகில் 2 ஏக்கர் பரப்பில் நினைவு மண்டபம் அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கப் படும் என்று அறிவித்தது.
ஆனால் தொண்டர்கள் கோரிக்கையோ வேறு விதமாக உள்ளது. கருணாநிதி தன் மனம் ஒன்றி அதிக நேரம் இருந்ததும், காதலித்ததும் அண்ணா அறிவாலயம்தான். திமுக., தலைமையிடமான இங்கேதான் அவர் கட்சிப் பணி செய்துள்ளார். சென்னையின் மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், தொண்டர்கள் அதிகம் வருவார்கள். ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்த ஒரே தலைவராகத் திகழ்ந்தவர் நம் தலைவர் கருணாநிதி. எனவே அவரையும் கட்சியையும் பிரித்துப் பார்க்க முடியாது. உடல் நலம் குன்றியிருந்தபோதும், அவ்வப்போது தன் மனம் விரும்பிய கடிதமடல் எழுதும் போதும் அவர் விரும்பியது இந்த அறிவாலயம்தான்…
கருணாநிதிக்கு அறிவாலயத்தில் சமாதி நினைவிடம் அமைப்பதுதான் சரியானது… இதுவே உண்மைத் தொண்டனின் உள்ளக் குரல் என்று அதற்கு ஆதரவாக பல குரல்கள் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
உதாரணத்துக்கு ஒரு குரல்…





