முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, தமிழகம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்ட பின்னர் 6 இடங்களில் அஸ்தி கரைக்கப்பட்டது.
சென்னை பெசன்ட் நகரில், தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் படகில் சென்று நடுக்கடலில் அஸ்தியை கரைத்தார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் வாஜ்பாய் அஸ்தியை கரைத்தார்.ராமேஸ்வரம், அக்னி தீர்த்தக் கடலில் தேசியச் செயலர் ஹெச்.ராஜா, பூஜைக்கு பின்னர் வாஜ்பாய் அஸ்தியை கரைத்தார்.
தன்னையும் கட்சியையும் தந்தையாய் தாயாய் வழிநடத்திய தலைவருக்கு தன் கையால் அஸ்தியை கரைத்து இறுதிச் சடங்கை இறுதி செய்தார் சிபி.ராதாகிருஷ்ணன்.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தமிழக பாஜக., மூத்த தலைவருமான இல.கணேசன் வாஜ்பாய் அஸ்தியைக் கரைத்தார். #காவிரியில்_சங்கமித்த_கங்கை! அடல் ஜீ #அஸ்திகலசயாத்திரை இன்று காலை #ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நிறைவுற்றது. வழியெங்கும் மக்கள் திரண்டு, மலர் தூவி மகாத்மா #வாஜ்பாய் ஜீக்கு அஞ்சலி செலுத்தினர். #காவிரி #வாஜ்பாய்அஸ்தியாத்திரை #AtalAsthiVisarjan#VajpayeeAsthi #AtalAsthiKalashYatra







