
காணவில்லை காணவில்லை! நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் வசந்த மண்டபத்தின் அழகிய அலங்கார தோட்டத்தைக் காணவில்லை! அதிலிருந்த தஷிணாமூர்த்தி, விநாயகர், நந்தி, சிலைகளைக் காணவில்லை.!
நெல்லையப்பர் கோவில் சித்திரை மாத வசந்த திருவிழா நடைபெறும் போது சுவாமி அம்பாள் இருக்கும் மண்டபத்தின் முன் எழில்மிகு தோட்டத்தில் நீரூற்றுகளுடன் கூடிய அழகிய தோட்டமும் அத்தோட்டத்து மண்டபத்தில் இருந்த சிலைகளையும் காண வில்லை!
இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது அது தனியார் நிறுவனத்தின் திருப்பணி! அது குறித்து தெரியாது என்று பதில் கூறுகின்றனர்.
ஶ்ரீரங்கம் கோவிலில் சிலைகளைக் காணவில்லை என்று பரபரப்பாக இருக்கும் வேளையில் இங்கு நெல்லையப்பர் கோவிலிலும் சிலைகள் காணாமல் போன விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
வெனிஸ் பட்டயத்தின் படி நூற்றாண்டு கண்ட இடங்களில் எந்த விதமான மாற்றமும் செய்யக்கூடாது என்ற விதிகளை எப்படி மீறலாம் என விவரம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள்.!
மேலும் ஶ்ரீரங்கம் கோவிலில் திருப்பணி செய்த அதே நிறுவனமே இங்கு நெல்லை யப்பர் கோவிலிலும் திருப்பணி செய்துள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.!
– கயிலைக்கண்ணன் வெங்கட்ராமன்



