சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர், உடற்பயிற்சி கூடத்தினுள் சென்று அங்கே வைக்கப்பட்டுள்ள உபகரணங்களை பார்வையிட்டார். பின்னர், இளைஞர்களிடம் உடற்பயிற்சி உபகரணங்கள் குறித்து கேட்டறிந்த அவர், தானும் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.
இறகுப் பந்து மைதானத்தில் களம் இறங்கி, இறகுப் பந்து விளையாடினார். வெறுமனே திறந்து வைத்துவிட்டு சென்றுவிடாமல், உபகரணங்கள் உறுதியானவையாக உள்ளனவா, சரியாக வேலை செய்கின்றதா என்றெல்லாம் சோதித்துப் பார்த்து, இளைஞர்களுடன் உரையாடிவிட்டுச் சென்றது பலரது பாராட்டைப் பெற்றது.




