December 5, 2025, 5:17 PM
27.9 C
Chennai

மாவட்ட வாரியாக திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Election Commission - 2025

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்டந் தோறும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர்களின் எண்ணிக்கை, சேர்க்கை, நீக்கம் உள்ளிட்டவை சரி செய்யப் பட்டு, இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி துணை ஆணையர் லலிதா வெளியிட்டார். இதில் ஆண் வாக்காளர்கள் 18,71,638 பேரும், பெண் வாக்காளர்கள் 19,19,582 பேரும், இதர வாக்காளர்களாக 906 பேரும் என மொத்தம் 37,92,126 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தற்போதைய பட்டியலில், 9,793 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2,96,058 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,64,939 வாக்காளர்களும் உள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மண்டல அலுவலகங்களில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்வோரின் நலன் கருதி, செப்டம்பர் மாதத்தில் 9 மற்றும் 23ஆம் தேதிகளிலும் அக்டோபர் மாதத்தில் 7 மற்றும் 14ஆம் தேதிகளிலும் வாக்குச் சாவடிகளிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் சுருக்க முறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். மாவட்டத்தில் 14,99992 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் இன்று துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. மாவட்ட ஆட்சியர் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். ஜனவரி மாதத்தை தகுதி ஏற்படுத்தம் நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக இன்று சுருக்கமுறை திருத்த வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

மூன்றாம் தேதி முதல் இந்த மாத இறுதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் தொடர்பான செய்து கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் அனைத்து கட்சியினர் முன்பு சுருக்க முறை திருத்த வரைவு வாக்காளர் பட்சியலை வெளியிட்டார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் 760473 ஆண் வாக்காளர்களும், 739315 பெண் வாக்காளர்களும் 204 இதர வாக்காளார்களும் உள்ளானர். ஆக மொத்தம் 1499992 வாக்காளர்கள் இந்த சுருக்க முறை வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிக்கு வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் அவர்கள் அங்கீகரிக்க பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு வெளியிட்டார். வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 762194, பெண்கள் 791323நபர்களும் இதர வாக்காளர் 145 பேரும் மாவட்டத்தில் 1553662 வாக்காளர்கள் இருப்பதாக பட்டியலில் கூறப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி திருவாடானை முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் அனைத்து கட்சியினர் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிட்டார் இதில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் பதினொரு லட்சத்து 14 ஆயிரத்து 48 வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆண் வாக்காளர்கள் ஐந்து லட்சத்து 56 ஆயிரத்து 614 பேரும் பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 57 ஆயிரத்து 369 பெண் வாக்காளர்கள் எனவும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 65 வாக்காளர்கள் ஆக மொத்தம் 11 லட்சத்து 14 ஆயிரத்து 48 நபர்கள் வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டனர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி திருப்பூரில் உள்ள 8 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். ஆண் வாக்காளர்கள் – 10,82,855 பெண் வாக்காளர்கள் – 10,88,377 மூன்றாம் பாலினத்தவர் – 245 மொத்தம் – 21, 71,477 மொத்த வாக்கு சாவடிகள் _ 2,482 சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி 1.09.2018 முதல் 31.10.2018 வரை நடைபெற உள்ளது

காஞ்சிபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:  ஆண் வாக்காளர்கள் 17 லட்சத்து 99 ஆயிரத்து 398 பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 35 ஆயிரத்து 497
இதர பாலினத்தார் 336 மொத்தம் 36 லட்சத்து 35 ஆயிரத்து 231 மாவட்ட வருவாய் துறை அதிகாரி வெளியிட்டார்

திருவாரூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் ஆட்சியர் நிர்மல்ராஜ் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 9 லட்சத்தி 83 ஆயிரத்தி 729 வாக்களார்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்தி 87ஆயிரத்தி 947 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்தி 95 ஆயிரத்தி 752 பெண் வாக்காளர்களும், 30 இதர வாக்காளர்கள் உள்ளனர்

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டார். தேனி மாவட்டத்தின் மொத்த வாக்களர்கள்
ஆண்கள் – 5,14.526 பெண்கள் – 5, 27, 977 இதரர் – 153 மொத்தம் – 10, 42,656

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி இன்று வெளியிட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 21 லட்சத்து 85 ஆயிரத்து 453 இதில்
ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 67 ஆயிரத்து 105 , பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 165 , மூன்றாம் பாலினம் 180.

கன்னியாகுமரி மாவட்டம்: கன்னியாகுமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரே வெளியிட்டார். ஆண் வாக்காளர்கள் 7,32,147 பேர், பெண் வாக்காளர்கள் 7,14,806 பேர், இதரர் 148 மொத்த வாக்காளர்கள் 14,47,101.

கோவை யில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆண் வாக்காளர்கள் – 1405003 பெண் வாக்காளர்கள் – 1428218 மூன்றாம் பாலினத்தவர் – 288 மொத்தம் – 2833509 சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி 1.09.2018 முதல் 31.10.2018 வரை நடைபெற உள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கன வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் ந்தூரி வெளியிட்டார்: அதிமுக திமுக உள்ளிட்ட  அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் வரைவு பட்டியலில் 01-09-18 வரையில் மாவட்டத்தில் வாக்காளர்கள் ஆண் 684905 பெண்கள் 705798 திருநங்கைகள் 89
என மொத்தம் 1390792 வாக்காளர்களும் 1593வாக்குச்சாவடிகளும் உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டார். தேனி மாவட்டத்தின் மொத்த வாக்களர்கள்
ஆண்கள் – 5,14.526 பெண்கள் – 5, 27, 977 இதரர் – 153 மொத்தம் – 10, 42,656

வேலூர்மாவட்டம்: வேலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராமன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 13 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள். 14,86,758 பெண் வாக்காளர்கள் 15,37,103 மூன்றாம் பாலினம். 118 மொத்தம். 30, 23,979

விழுப்புரம் மாவட்டத்தில் வரைவு வாக்களர் பட்டியலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் வெளியிட்டார் 26,13918 மொத்த வாக்களர்கள் உள்ளனர். 2,135 பேர் நீக்கப்பட்டு புதிதாக 18,763 பேர் சேர்க்கப்பட்டனர்.

நாமக்கல்லில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. மு.ஆசியாமரியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார். நாமக்கல், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், குமாரபாளையம் ஆகிய 6 சட்ட தொகுதிகளில் 13,60,506 வாக்காளர்கள் உள்ளனர். 6,65,423 ஆண் வாக்காளர்களும், 6,94,969 பெண் வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கரூர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெளியிட்ார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி கரூர் கிருஷ்ணராயபுரம் குளித்தலை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் உள்ள ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 5 ஆயிரத்து 218, பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 900, இதர வாக்காளர்கள் 48 பேர். மொத்த வாக்காளர்கள் 8 லட்சத்து 33 ஆயிரத்து 166. வாக்குச்சாவடி மையங்களில் எண்ணிக்கை 1031. வாக்குச்சாவடி அமைவிடங்களின் எண்ணிக்கை 608.

ஈரோடு மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 18,42,390 பதினெட்டு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரத்து மூன்னூற்று தொண்ணுறு ஆகும் ஆண் வாக்காளர்கள் 90,4432 பேரும் பெண் வாக்காளர்கள் 93,7888 பேரும்
மூன்றாம் பாலினம் 70 பேர் என அரசியல் கட்சி முன்னிலையில் வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் வெளியிட்டார்

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 18 ஆயிரத்து 557 பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 30 ஆயிரத்து 951 இதர பாலினத்தார் 29 மொத்தம் 12 லட்சத்து 49 ஆயிரத்து 537 மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்  வெளியிட்டார்

சிவகங்கை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார் சிவகங்கை  காரைக்குடி திருப்பத்தூர். மானாமதுரை ( தனி)  4 சட்ட தொகுதிகளில் 1102399 வாக்காளர்கள் உள்ளனர். 545300 ஆண் வாக்காளர்களும், 557051 பெண் வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories