சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசையுடன் பயணித்த பெண் சோபியா, திடீரென தரக்குறைவாக அவரை விமர்சித்ததால் பிரச்னை ஏற்பட்டது. தமிழிசையின் புகாரின் பேரில் சோபியா கைது செய்யப் பட்டார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை அரசியல் பிரச்னையாக திமுக., கையில் எடுத்ததால், பெரிய அளவில் திமுக.,வினரால் டிவிட்டர் டிரெண்டிங் செய்யப் பட்டது. மேலும், நக்ஸல், தனித்தமிழ் பிரிவினைவாத இயக்கங்களும் சோபியாவுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்ததால், இந்தப் பிரச்னை இன்று ஊடக விவாதம் ஆகியுள்ளது.
இந்நிலையில், இந்தப் பிரச்னையின் பின்னணியை இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், விமான நிலையத்தில் சோபியா , என்னை பார்த்து முறைத்தார். அதுவும் விமானத்துக்குள்ளே கோஷம் போட்டார். சோபியாவின் பின்புலம் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. நான் விமான நிலைய விதிமுறைக்கு உட்பட்டே என்னுடைய புகாரை அளித்தேன் என்று தெளிவுபடுத்தினார். @DrTamilisaiBJP @bjp4tamilnadu
விமானத்திற்குள் என்னை நோக்கி பாஜகவை கடுமையாக விமர்சித்தார் மாணவி சோபியா . பாதுகாப்பு கருதி விமானத்தின் உள்ளே நான் எதுவும் பேசவில்லை என்று கூறிய தமிழிசை, மாணவி சோபியாவின் பின்புலத்தில் ஏதாவதொரு அமைப்பு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார். @DrTamilisaiBJP | #BJP | #Sophia
இதனிடையே, விமானங்களில் ஒழுக்கமில்லாத நடவடிக்கை தண்டனைக்குரிய குற்றம். தமிழக அரசியல்வாதிகளே! விமான பயணத்தின் போது, ஒரு கட்சி தலைவரை அதுவும் மரியாதைக்குரிய ஒரு பெண்மணியை முற்றுகையிட்டு, அவரை தகாத வார்த்தைகளால் பேசுவதை பாஜகவை சேர்ந்தவர் என்ற காரணத்தால் கண்டிக்காமல் குற்றம் புரிந்தவரை ஆதரிக்கும் நிலையை எடுப்பது உங்களின் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டு கொள்ளும் முயற்சி. நாளை விமான பயணத்தில் உங்களையும் சிலர் அவமதிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊடகவியலாளர்கள் இது நாள் வரை விமான பயணங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை எப்படி கையாண்டீர்கள் என்பதை நினைத்து பார்க்கவும்… என்று எச்சரிக்கைக் குரல் எழுப்பியிருக்கிறார் பாஜக.,வை சேர்ந்த நாராயணன் திருப்பதி.
காரணம், பாஜக.,வை எதிர்த்து கருத்து தெரிவித்தார் என்ற காரணத்துக்கா, சூழலின் பின்னணி புரியாமல், திமுக., தலைவர் ஸ்டாலின் முதிர்ச்சியற்ற அரசியல் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சோபியாவுக்கு ஆதரவு கூறியதுடன், நானும் சொல்லுவேன் பாசிச பாஜக., ஆட்சி ஒழிக என்று என குரல் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” https://t.co/JoPajdrSW5
— M.K.Stalin (@mkstalin) September 3, 2018
ஸ்டாலினின் டிவிட்டர் பதிவால் சென்ற வாரம் வரை திமுக.,வுடன் ஒட்டுறவாடி வந்த தமிழிசை திடீர் அதிர்ச்சி அடைந்துள்ளார் அந்த அதிர்ச்சியை, தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இப்போதும் கூட, ஸ்டாலின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது என்றோ, திமுக.,வை விமர்சித்தோ அவர் கருத்து எதையும் பதிவிடவில்லை!
Surprised to see reactions of few TN leaders insupport of her unruly behavior inside aircraft claiming it as Democratic right.Will they accept a similar situation happens for them during their next air journey inside plane will they or their cadres keep quiet as Democratic right?
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 3, 2018




