தூத்துக்குடி: சோபியாவை ஜாமினில் விடுவிப்பது குறித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் 12 மணிக்கு விசாரிக்கப் பட்டது. சோபியா மனுவை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து முடித்தது. பின்னர் அந்தப் பெண்ணை ஜாமினில் விடுவித்தது தூத்துக்குடி நீதிமன்றம்!
முன்னதாக, தூத்துக்குடியில் விமானத்தில் பாஜக., தலைவர் தமிழிசையை விமர்சனம் செய்த பெண் பயணி சோபியாவிடம் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், சோபியா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்தது தூத்துக்குடி நீதிமன்றம்!
இதனிடையே, தூத்துக்குடி விமானத்தில் பெண் பயணி சோபியாவிடம் தமிழிசை செளந்திராஜன் உட்பட 10 பேர் கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.




