December 5, 2025, 8:17 AM
24.9 C
Chennai

ஆலயப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யக் கோரி இமக., மனு!

hindu makkal katchi - 2025
கோயில் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்துமக்கள் கட்சி சார்பில், அமைச்சர் சேவூர் ராமசந்திரனிடம் மனு

சென்னை: பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி போராட்டத்துக்கு தூண்டிவிட்டு, ஆலயப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் அமைச்சர் சேவூர் ராமசந்திரனிடம் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணிக்கு முதலமைச்சர் தனிப் பிரிவில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலர் ராம.ரவிக்குமார் தலைமையில் கட்சியினர் சென்று மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறப் பட்டுள்ளதாவது…

பெறுநர்
1. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு தலைமை செயலகம், சென்னை .

2.மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், தலைமைச் செயலகம் சென்னை.

பொருள் :

பாஜக தேசிய செயலாளர் திரு எச் ராஜா அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக திருக்கோயில் பணியாளர் சங்கம் ஊழியர்களின் வீட்டுப் பெண்களை அவதூறாக பேசி விட்டார் என்று பொய்யான செய்தியை பரப்பி திரு ஹெச் ராஜா அவர்களுக்கு எதிராக அவதூறு கற்பிக்கும் உள்நோக்கத்தோடு , பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு இடையூறு செய்து அரசு அலுவலகம் போல புறக்கணிப்பு செய்து திருக்கோயில்களை ஆர்ப்பாட்ட, போராட்டக் களமாக மாற்றிய திருக்கோயில் பணியாளர் சங்க ஊழியர்கள் மற்றும் போராட்டத்தை தூண்டி விட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திட கோரி இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் புகார் மனு.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்,

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திருஹெச் ராஜா அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேசிய ஒரு பொதுக்கூட்டத்தில் தமிழக திருக்கோவில்களின் அவலங்கள், நிர்வாகச் சீர்கேடு , நில ஆக்கிரமிப்பு திருக்கோயில் நிலங்களில் வாடகைக்கு இருப்போர் முறையாக வரி செலுத்தாமல் இருப்பது அவர்களிடம் இருந்து விவசாயம் செய்ய வேண்டும் ,மற்றும் திருக்குளங்கள் ஆக்கிரமிப்பு , சம்பந்தமாகவும் அரசாங்கத்தின் பிடியில் இருந்து இந்து சமயக் கோயில்களில் விடுவிக்க வேண்டும் இதற்காக பக்தர்கள், பொதுமக்கள் போராட வேண்டும் .

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாதது. அதுபோல அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கோயில்கள் உருப்படாது என்று தான் பேசினார் .

ஆனால் அவர் பேசிய விஷயத்தை திசை திருப்பும் நோக்கத்தோடும் திரு ஹெச்ராஜா அவர்கள் மீது களங்கம் கற்பித்து அவதூறு பரப்பும் கெட்ட எண்ணத்தோடு தமிழக திருக்கோவில் பணியாளர்கள் சங்கம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர்கள் அலுவல் பணியை புறக்கணித்து விட்டு, திருஹெச் ராஜா அவர்கள் அறநிலையத் துறை ஊழியர்களின் வீட்டுப் பெண்களை அவதூறாக பேசி விட்டார் என்று பொய்யான தகவலை பரப்பி திட்டமிட்டு பக்தர்கள் வழிபாடு செய்யக் கூடிய திருக்கோயில்களில் இடையூறு செய்கின்ற வகையில் தமிழகத் திருக்கோயில்களில் எல்லாம் அனுமதியில்லாத ஆர்ப்பாட்ட களமாக மாற்றி திருச்சி ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி போராட்டக் களமாக மாற்றி இருக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் என்பது அரசு அலுவலகம் அல்ல, திரு எச் ராஜா அவர்கள் பேசியதாக இவர்கள் குற்றச்சாட்டு சொல்வார்களேயானால் முறையாக காவல் துறையிடம் சென்று புகார் தெரிவிக்கலாம் அல்லது முறையான அனுமதி பெற்று காவல்துறை அனுமதிக்கும் இடங்களில் போராட்டம் ஆர்ப்பாட்டம் ஜனநாயக வழிமுறைகளில் போராடலாம் .

அதை விட்டுவிட்டு பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு தொந்தரவு செய்வதுஎன்ற அடிப்படையில் தமிழகத்தில் உள்ளத் திருக்கோயில் வளாகங்களில் அலுவல் பணிகள் எல்லாம் புறக்கணித்துவிட்டு, திருஹெச் ராஜா அவர்களை கைது செய் என்று கோஷம் எழுப்பி போராடி இருப்பது சட்டவிரோதம்

ஆகவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தமிழகத் திருக்கோயில்களில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் இந்து திருக்கோயில் பணியாளர் சங்கம் உறுப்பினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது பணிநீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
– என்று கூறப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories