Homeஉள்ளூர் செய்திகள்அனைத்துத் துறையிலும் தோல்வி; இந்த அரசு நீடிக்கக் கூடாது: பாமக., ராமதாஸ்

அனைத்துத் துறையிலும் தோல்வி; இந்த அரசு நீடிக்கக் கூடாது: பாமக., ராமதாஸ்

ramadoss - Dhinasari Tamil

சென்னை: அனைத்துத் துறையிலும் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது, இந்த அரசு நீடிக்கக் கூடாது என்று கூறினார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள புதிய மாங்கனி அரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் .ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பினாமி அரசு தோற்றுவிட்டது. எடப்பாடி அரசு மக்களுக்கான ஒரு திட்டத்தை கூட செய்யவில்லை, கல்வி சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று முக்கிய துறையிலும் படுதோல்வி அடைந்து விட்டது , அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு இல்லை.

ஒரு பள்ளியில் கழிவறை இல்லை என்றாலும் அரசு தோல்வி அடைந்தது என அர்த்தம். பள்ளியை சீரமைத்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகப் படுத்த வேண்டும். 3 ஆயிரம் பள்ளி மூடப் போவதாக கூறியுள்ளனர். அவ்வாறு செய்தால் பாமக மிகப் பெரிய போராட்டம் நடத்தும்.

இது போல் உயர்கல்வி துறையில் 4247 பணியிடம் நிரப்ப படாமல் உள்ளது. இதனால் அந்த கல்லூரி தரம் சீரழிகிறது. அனைத்து வகையான நோய்களும் தமிழகத்தில் உள்ளது. சுகாதார துறை அமைச்சரோ குட்கா விற்பனையில்  கவனம் செலுத்துகிறார்.

மேட்டூர் அனை நான்கு முறை நிரம்பியது ஆனால் திருவாருர் மாவட்டத்தில் கடைமடை பகுதியில் பயிர்கள் காய்த்துவிட்டதாக விவசாயிகள் போராட்டம் செய்கின்றன அவலம் உள்ளது.

மின் மிகை மாநிலம் என கூறுகின்றனர். ஆனால் மின் வெட்டு தொடர்கிறது . அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. அரசு தோல்வி அடைந்து விட்டது இதனால் அரசு நீடிக்க கூடாது உடனடியாக பதவி விலக வேண்டும்

பினாமி அரசு இம்மாத இறுதிக்குள் கவிழும் எம்எல்ஏ பதவி நீக்க வழக்கு விசாரணைக்கு வருகிறது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன்  கூறும் தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு எதிராக இருக்கும். எனவே பினாமி அரசு நிச்சயமாக கவிழும். தீர்ப்பு வந்த உடன் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். அரசுக்கு துணை போக கூடாது.

அரசின் மீது தொடர்ந்து வரும் ஊழல் குற்றசாட்டிற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. 2018ல் மட்டும் 15 வகையான ஊழல் நடந்ததாக புள்ளிவிவர ஆதாரத்தோடு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாமக ஆளுனரிடம் முறையிடும்.

நெல் கொள்முதல் விலை உயர்தி வழங்க வேண்டும். நெல் கொள்முதல் அடுத்த மாதம் துவங்க உள்ளது இதனால் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதலாக உயர்த்தி குறைந்த விலை 2500 ரூபாயாவது வழங்க வேண்டும்.

7 பேர் விடுதலை குறித்து  அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி 11 நாள் ஆகிறது ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு விஷம் போல் உயர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இன்று மட்டும் தான் இதுவரை அறிவிக்கப்படவில்லை ஒரு லிட்டர் 85.41 டீசல் 78.5 என அதிபயங்கர விலை அதிகமாக உள்ளது கடந்த ஐம்பது நாட்கள் மற்றும் முப்பத்தி ஒரு முறை உயர்ந்துள்ளது மக்களை நசுக்குவது முறையல்ல ஆந்திரம் கர்நாடக மாநிலத்தில் விலை குறைக்கப்பட்டுள்ளது தமிழகத்திலும் விலையை குறைக்க முன்வர வேண்டும்

காவிரி கொள்ளிடம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணல் கொள்ளை சிறிது தடுக்கப்பட்டுள்ளது நாமக்கல் கரூர் போன்ற மாவட்டங்களில் மணல் கொள்ளை முழுவீச்சில் நடக்கிறது.

விழுப்புரத்தில் மணல் கொள்ளை உச்சத்தை அடைந்துள்ளது சங்கராபரணி தென்பெண்ணை மணிமுக்தா ஆறுகளில் மற்றும் ஏரிகளில் அதிகளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது மணல் கொள்ளைக்கு துணை போவதாக விழுப்புரத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் ஆனால் வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

இதனை தமிழக அரசு தலையிட்டு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் மேலும் மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வரும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ளது ஆனால் பிளாஸ்டிக்கை தடுக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை பிளாஸ்டிக் மாற்றுப் பொருள் தயாரிக்க இப்பொழுது முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மக்கும் பொருட்களை அதிக அளவில் தயார் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து கட்டாயமாக ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் காரணம் காட்டி தள்ளிப் போடக் கூடாது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மத்திய மாநில அரசுகள் துணை போக கூடாது. அந்த ஆலைக்கு ஆதரவாக விவசாயம் அமைப்பு என்ற என்ற பெயரிலும் தொழிலாளர் நல பிரிவு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது அதன் மூலம் அந்த ஆலையை திறக்க கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த ஆலயால் புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மக்களின் உயிருக்கு வேட்டு வைக்கும் இந்த ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது!

ஆசிய நாடுகளை புரட்டி ப்போட்ட பெரும்புயல் தமிழகத்தையும் தாக்கும் அபாயம் உள்ளது. இதனை சமாளிக்க அரசானது தயாராக வேண்டும். புயலின் தாக்கம் 240 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருந்தது. அதேபோல் புயல் ஏற்பட்டால் தமிழகத்திலும் அந்த அளவுக்கு புயலின் வேகம் இருக்கும்.

பணக்கார நாடுகள் என்பதால் அமெரிக்கா போன்ற நாடுகளை சமாளித்தது ஆனால் தமிழகத்தில் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதை சமாளிக்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

அதிக மழை புயல் வறட்சி என பன்மடங்கு அதிகமாகும் என உலக அறிவியலாளர்கள் கருத்தாக உள்ளது எனவே வங்கக்கடலில் புயல் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் அரசுக்கு  முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் மக்கள் தொலை நோக்கு பார்வை உள்ள அரசை பெற்றுள்ளதா என சந்தேகப் படும் படியாக உள்ளது என பேசினார்.

அவரது பேட்டியின் வீடியோ ….

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,078FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,969FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 14 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

அகண்டா: தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை!

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும்...

வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக...

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Latest News : Read Now...