கேரளா செல்லும் சரக்குவாகனங்கள் புளியரை சோதனைசாவடியில் நிறுத்தம்

kerala loo
புளியரை சோதனைசாவடியில் நிறுத்தப்பட்டுள்ளவாகனங்கள்
  செங்கோட்டை:கேரளாவில் இடதுசாரி தொழிலாளர் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்களுக்கான 3–வது நபர் காப்பீட்டு தொகை உயர்வை கண்டித்து மோட்டார் தொழிலாளர்களும், மீனவர்களுக்கு எதிரான மீனாகுமாரி கமிஷன் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி மீனவ தொழிலாளர்களும், ரப்பர் விலை வீழ்ச்சி உள்பட விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இந்த முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களும் ஓடவில்லை. கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கேரளாவில் நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக தென்காசி,செங்கோட்டையிலிருந்து இருந்து கேரளாவுக்கு பேருந்துக்கள் இயக்கப்படவில்லை. வழக்கமாகதென்காசி,செங்கோட்டையிலிருந்து ,கொல்லம்,திருவனந்தபுரம் ,பாலக்காடு, கொச்சின் உள்பட கேரளாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும்.5 பேருந்துக்களும்,கேரளமாநிலத்தில் இருந்து தமிழக கேரளா எல்லைப்பகுதியான தென்காசி,செங்கோட்டைக்கு 40க்கும் மேற்ப்பட்ட பேருந்துக்கள் இயக்கப்பட்டன.ஆனால் இன்று அந்த பேருந்துக்களும் முற்றிலுமாக இயக்கப்படாமல் டெப்போவில் நிறுத்தப்பட்டன. இதனால் எல்லைப்பகுதி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கேரளாவுக்கு செல்லும் பொதுமக்கள் பஸ் நிலையம் வந்து பரிதவிப்புக்குள்ளாகினர். பின்னர் அவர்கள்தனியார் வாகனங்கள் மூலம் கேரளா புறப்பட்டனர். இதனால் தென்காசி,செங்கோட்டையிலிருந்து இருந்து கேரளா செல்லும் ஆட்டோ,கார்களில் கூட்டம் அலைமோதியது. செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் புளியரை சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன.இதன் காரணமாக .எல்லையில் எராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கியுள்ளன.தினமும் ஆயிரக்கணக் காண வாகனங்கள் செல்லும் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையான இந்த சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.