
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவி அறந்தாங்கியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது
அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆவுடையார் கோவில் தாலுகா பகுதி விவசாயிகள் கலந்து கொண்ட முற்றுகைப் போராட்டம் நடந்தது போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்
போராட்டத்தில் கடந்த வருடம் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீட்டை உடனே வழங்க கோரியும் ஆவுடையார் கோவில் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரி வைகை குண்டாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியும் ஆவுடையார் கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னு.சாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கலந்தர் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் கூத்தபெருமாள் விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் காளிமுத்து மா கம்யூ ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னாள் ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



