புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தில் சாய்ந்த தென்னை மரங்களை இழுத்து டிராக்டர் மூலம்கட்டி இழுந்து நிமிர்த்தி உயிர் கொடுக்கும்வேலையில் ஒருவிவசாயி ஈடுபட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் கஜா புயல்தாக்குதல் காரணமாக பல ஆயிரம் தென்னை மரங்கள் அறந்தாங்கி பகுதியில் வேருடன் சாய்ந்தது அதிில் சிறிய மரங்களை மட்டும் நிமிர்த்தி இழுத்து கட்டும் பணியில் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி திருஞானம் ஈடுபட்டு வருகிறார்.இவ்வாறு சாய்ந்த மரங்களை உரிய முறையில் இழுத்து கட்டினால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது இருப்பினம் ஆறு மாதம் கழித்துத்தான் இந்த மரத்தின் நிலையை எந்த நிலையில் வளர்ந்து வருகிறது என்பதை உறுதி செய்யமுடியும் என்றார்.அறந்தாங்கி அருகே அரசர்குளம் ஆயிங்குடி மறமடக்கி ராசேந்திரபுரம் ஆவணத்தாங்கோட்டை உட்பட அதை சுற்றியுள்ள பல கிராமங்களில் தெனனை சாய்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
அறந்தாங்கி அருகே மேலப்பட்டு பகுதியில் கஜா புயலால் சாய்ந்த மரங்களை நிமித்தி உயர்கொடுக்கும் விவசாயி
Popular Categories



