தேமுதிக சார்பில் ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடி வருகிறது இந்த ஆண்டு வடசென்னை தண்டையார்பேட்டை புனித நற்செய்தி அருளப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ,மற்றும் கழக அவைத் தலைவர் டாக்டர்.இளங்கோவன், கழக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ், ஆகியோர் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு பிரியாணி, கேக் வழங்கினர். நிகழ்ச்சியில் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாவட்டம், பகுதி, வட்டம், கிளை கழகம் மற்றும் தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர் .
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari