அம்பேத்கர் பிறந்தநாளை கரூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப் பட வேண்டும் – கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கூட்டத்தில் முடிவு

கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் சித்திரை முதல் நாளான 14 ம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து  சிறப்பாக  விழா கொண்டாடுவது எனவும் ,மேலும் ஏப்ரல் 16 ந் தேதி காலை தமிழ் வருட பிறப்பை மத்திய அமைச்சர் முன்னிலையில் மிக பிரமாண்டமாய் கொண்டாடுவது ,அன்று மாலையே அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை தாழ்த்த பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மத்திய அமைசர் முன்னிலையில் கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் ஏப்ரல் 23 ந் தேதி கரூர் மாவட்டத்திற்கு வரும் மாநில தலைவர்  டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை மிக பிரமாண்டமாய் வரவேற்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில செற்குழு உறுபினர் கிருஷ்ணகுமார், ஈஸ்வரி, மாவட்ட பொது செயலாளர்கள்  கைலாசம், முருகனந்தம் ,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ,ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை கரூர் மாவட்டத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நீரூபிக்க அனைத்து பா.ஜ.க நிர்வாகிகளும் பாடு பட வேண்டும் என அனைத்து நிர்வாகிகளையும் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கே.சிவசாமி கேட்டுக் கொண்டார்.10-04-15 Karur Bjp News Photo 02 10-04-15 Karur Bjp News Photo 01