ஆரியங்காவு பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

Published:

IMG 20190115 WA0076 - 2026

கேரளா ஆரியங்காவு பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

கேரளாவில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு வந்து பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தப் பொங்கலை மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தியாக கொண்டாடுகிறார்கள்.

ariyankavu amman temple pongal1 - 2026

இதே போல கேரள மக்களின் கலாசாரம் பாரம்பரியத்துடன் இணைந்து வாழும் தமிழின மக்கள் கேரளாவில் ஓணம் உள்பட அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகிறார்கள்.

ariyankavu amman temple pongal2 - 2026

இதே போல தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மாறாமல் கேரள மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

ariyankavu amman temple pongal4 - 2026

இந்த நிலையில் தமிழக கேரளா எல்லைப்ப் பகுதியான ஆரியங்காவிலுள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் வளாகத்திலுள்ள பேச்சியம்மன் கோவில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதே போல இன்று காலை ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு வந்து பொங்கல் பானையில் பொங்கல் வைத்து குலவையிட்டு பால் பொங்கலிட்டனர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
ariyankavu amman temple pongal5 - 2026

இந்த பொங்கல் விழாவில் தமிழக, கேரள மாநிலத்தை சேர்ந்த அயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img