எங்களுடன் யார் கூட்டணி வைப்பது என்பதை நாங்களே முடிவு செய்வோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி
pon radhakrishnan - 2026

எங்களுடன் யார் கூட்டணி வைப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எந்த திட்டமும் அறிவித்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், பாதிக்கப்படப் போவது மக்கள் தான்.

திருச்சி விமான நிலைய விரிவாக்கம் செய்ய நிலம் தேவை. தொழில்துறை விரிவாக்கத்திற்கு விமான நிலைய விரிவாக்கம் அவசியம்.

ஜெயலலிதா மிகப்பெரிய ஆளுமையுடன் மிகப் பெரும் ஆலமரமாகத் திகழ்ந்தார்! மற்றவர்கள் எல்லாம் அதில் இருந்த பறவைகள். ஜெயலலிதாவுடன் அவர்களை ஒப்பிடக்கூடாது.

எங்களுடன் யார் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நாட்டிற்கு எது நல்லதோ அதன்படி கூட்டணி விவகாரத்தில் முடிவு எடுப்போம்.

10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்த திமுக ஏழைகளுக்கு எதிரான கட்சி என்பது நிருபணம் ஆகியுள்ளது… – என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

அண்மையில் அதிமுக., எம்.பி., தம்பிதுரையும், அமைச்சர் ஜெயக்குமாரும் கூட்டணி விவகாரத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். பாஜக., அதிகாரப் போக்குடன் செயல்படுவதாகக் கூறியிருந்தனர். இந்நிலையில் அந்தக் கருத்துகளுக்கு பதில் தரும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.