நாகர்கோயிலில் தியாகி குமாருக்கு வீரவணக்கம்!

Published:

kumar nagarkoil memory meeting - 2026

நாகர்கோயிலில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடந்த போது இன்னுயிர் துறந்த தியாகி குமாருக்கு இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

கடந்த 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நாகர்கோயில் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. அப்போது நடைபெற்ற இந்து எழுச்சி மாநாட்டில் கலந்துகொண்ட குமார், நாகர்கோவில் கோட்டார் சந்திப்பில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தன்னுடைய சட்டையை கழற்றி மார்பை காண்பித்து முன்னே நின்று வீரத்தை வெளிப்படுத்தினார்..

அதில், இந்து சமுதாயத்திற்கும் நலனுக்காகவும் தன் இன்னுயிரைத் துறந்த தியாகி குமாருக்கு 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று இந்து முன்னணி சார்பில் கடைப்பிடிக்கப் பட்டது.

நாகர்கோவில் கோட்டாறு சந்திப்பில் தியாகி குமார் நினைவுத் தூண் இருக்கும் பகுதியில் இந்து முன்னணி கொடி ஏற்றப்பட்டு, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img