கரூரில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து ஆம்னி வேன் விபத்து – 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலி – 8 பேர் படுகாயம்

கரூர் ரயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் பகுதியை அடுத்த நல்லூர் பகுதியை சார்ந்தவர் பெருமாள் (வயது 60). இவர் தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரம்  கோயிலுக்கு சென்று கரூரை கடக்கும் போது ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேனாது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெருமாளின் 3 வயது பேத்தி இளமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஆம்னி வேன் டிரைவர் சுரேஷ், பெருமாள் உள்பட 8 பேர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பிய போது நிகழ்ந்த இந்த விபத்தில் அப்பாவி 3 வயது சிறுமி பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆம்னி வேன் தலைகுப்புற கவிழ்ந்ததா ? இல்லை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதா ? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.accident-1 accident-2