புதிய ரயில்கள், புதிய ரயில் தட அடிக்கல் நாட்டு! பியூஷ் கோயல் தருமபுரியில்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்

goyal present - 2026தமிழகத்தில் உள்ள மொரப்பூர், தருமபுரி இடையில் ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான அடிக்கல் நாட்டி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இரு ரயில்கள் குறித்தும் அறிவிக்கப் பட்டது.

நெல்லை வரை சென்று வந்த அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோயில் வரை நீட்டிக்கப்பட்டது, தாம்பரம் – கொல்லம் சிறப்பு கட்டண ரயில் இன்று முதல் சென்னை எழும்பூர் – கொல்லம் தினசரி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது .இதனை கொடி அசைத்து துவக்கி வைத்தார் பியூஷ் கோயல்.

piyush flag - 2026

தர்மபுரி வழியாக ஹோசூர் சேலம் இடையிலான ரயில் பாதை இரட்டைப் பாதையாக மாற்றவும், மின் பாதையாக மாற்றவும் தேவையான சர்வே எடுக்க உத்தரவு பிறப்பித்திருப்பதாக கோயில் புதிய அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறினார்.

piyush foundation - 2026

மேலும், நாடு நரேந்திர மோடியின் கரங்களில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். புதிய இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக திகழும் என்பதை நாம் நிரூபித்திருக்கிறோம்! ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு நிச்சயம், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை, 24 மணி நேர மின் விநியோகம் என்பதே லட்சியம் அதை செய்வோம் என்றார் பியூஷ் கோயல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.