தேவைப்பட்டால் இந்தியா முழு வலிமையைக் காட்டும்: குடியரசுத் தலைவர்

Published:

ramnath govind - 2026

கோவை: அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும் போது முழு வலிமையை காட்ட தயங்காது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள  ராம்நாத் கோவிந்த், கோவை மாவட்டம் சூலூரில் 2 விமானப்படை தளங்களுக்கு கலர்ஸ் பிரசெண்டேசன் விருதை வழங்கினார்.

சூலூர் 5 பேஸ் ரிப்பேர் டிப்போ மற்றும் கர்நாடகாவின் ஹக்கிம்பெட் விமானப்படை தளங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

முன்னதாக விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், இந்திய இறையாண்மையை பாதுகாக்க விமானப்படை பெரும் பங்கு ஆற்றி வருகிறது.

ramnathgovind - 2026

இந்திய விமானப்படை உறுதியுடன் உள்ளது. அதனை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்வோம். பயங்கரவாதிகளின் முகாமை அழித்த தாக்குதலில் விமானப் படை தீரத்துடன் சிறப்பாக செயல்பட்டது.

பேரிடர் காலங்களில் விமானப் படையின் பணி மகத்தானது. அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும் போது முழு வலிமையை காட்டவும் தயங்காது என்று பேசினார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Related articles

Recent articles

spot_img