போராட்ட எதிரொலி … பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு விடுமுறை!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்

pollachi issue - 2026

போராட்ட எதிரொலியாக பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை­ அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொள்ளாச்சியில் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் நேற்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு -கடும் நடவடிக்கை கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாலியல் கொடூர விவகாரத்தில் போராட்டத்தை தடுக்க பொள்ளாச்சியில் சில தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

உடுமலை சாலை, பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகள், கல்லூரி, #BarNagaraj வீடு உள்ளிட்ட இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், பதற்றத்தை தணிப்பதற்காகவும் 2 ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பிக்கள் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக பொள்ளாச்சி நகரில் உள்ள 7 கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்குமாறு, கல்லூரி நிர்வாகங்களுக்கு போலீசார் வேண்டுகோள் விிடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.