தெரிந்தே… பரபரப்புக்காக தவறு செய்யும் ஊடகங்கள்!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் கோவை புகார் பெட்டி

pollachi issue - 2026

மவுண்ட் ரோடு மாவோ ~ தி ஹிந்துவில் வந்த செய்தி: தமிழகம் கடந்தும் மனித நெஞ்சங்களை பதைபதைக்க வைத்திருக்கும் பாலியல் கொடுமை அரங்கேறியிருக்கிறது.

‘பாதிப்புக்கு உள்ளான பெண்களும் அவர்களின் உறவினர்களும் தங்களைப் பற்றிய அடையாளங்களும் வீடியோ உள்ளிட்ட வெவ்வேறு வடிவங்களில் வெளியாவதன் மூலம், வாழ்நாள் முழுமைக்குமான அவமானத்தில் சிக்கி விடுவோமோ என்ற கலக்கத்தில் தினம் தினம் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘பரபரப்புச் செய்தி என்ற பெயரில் அப்படியொரு பாதிப்பு யாருக்கும் வந்துவிடக் கூடாது, இந்த பாலியல் கொடுமை தொடர்பான காட்சி மற்றும் ஆதாரங்கள் எது கிடைத்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் படங்கள், குடும்பங்களில் பாதிப்பு ஏற்படுத்துவது மாதிரியான தகவல்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, அடையாளங்கள் மறைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.

நம்ம பார்வை:

இதெல்லாம், தெளிவா தெரியிறமாதிரி அட்டைப்படம், பேட்டி, செய்தி, சமூக வலைத்தளங்களில் பரப்புதல், போன்றவற்றை செய்தவனும், செய்யத் தூண்டியவனும், என்ன மாதிரி ஜென்மங்கள்? இவர்களுக்கு தக்க தண்டனை உடனடியாக கிடைக்க வழிவகை செய்வது, எதிர்காலத்தில் இப்படி டிஆர்பி, அரசியல் ஆதாயம், ஆகியவற்றிற்காக அபலை பெண்களின் வாழ்க்கையை, அவரது குடும்ப நிம்மதியை குலைக்கும் மிருகங்களின் காட்டுமிராண்டித் தனத்தை நிறுத்தக்கூடும்.

~ மு.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.