தூத்துக்குடியில் தமிழிசை, கனிமொழி! தீவிர ஓட்டு வேட்டை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

thamizisai thevar - 2026

தூத்துக்குடியில் பாஜக., வேட்பாளராக தமிழிசையும் திமுக., வேட்பாளராக கனிமொழியும் போட்டியிடுகின்றனர். இருவருமே வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கணிசமாக நாடார் சமுதாய வாக்குகள் உண்டு. எனவே, தமிழிசை சௌந்தர்ராஜன் தார் சார்ந்த நாடார் இன மக்களின் ஆதரவைக் கேட்டு பிரசாரம் செய்து வருகிறார். அதே போல், கனிமொழியும் தனது தாயார் நாடாரினத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார்.

அதே நேரம் மற்ற தொகுதிகளில் நாயக்கர், தேவர், தேவேந்திர குல வேளாளர், வேளாளப் பெருமக்கள் நிறைந்திருக்கின்றனர். இதற்காக, அந்த அந்தப் பகுதி மக்களை ஈர்க்க சாதி ரீதியில் ஓட்டுக்களைக் கேட்டு வருகின்றார்கள்.

kanimozhi thuthukkudi - 2026

தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற பெயருடன் கனிமொழி களத்தில் இறங்கியிருக்கிறார். அதே நேரம், மூத்த காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தனின் மகள் என்ற நிலையில் தமிழிசை இருக்கிறார்.

திமுக.,வினர் இந்து தெய்வங்களையும், இந்துக்களின் சடங்குகளையும் இழித்துரைத்தும் பழித்துரைத்தும் அரசியல் செய்துவந்தனர். ஆனால், அப்போது கொதித்தெழுந்த மக்கள் இந்தத் தேர்தல் நேரத்தில் அனைத்தையும் மறந்து விடுவர் என்று கணக்கு போடும் திமுகவினர், கனிமொழியை கோவில்களுக்கும் அழைத்துச் சென்று வருகின்றனர்.

கனிமொழி அவ்வாறு தூத்துக்குடியின் மிகவும் புகழ்பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் சென்ற போது, அவருக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப் பட்டது. இந்தப் படமும் சமூகத் தளங்களில் வைரலானது ஆனால், அதைச் சொல்லியே பலரும் ஆலயத்தில் பணி செய்யும் அர்ச்சகர்களை வசை பாடினர். கனிமொழி எவ்வாறெல்லாம் இழிவு படுத்தினார். அவருக்குப் போய் இந்த மரியாதையா என்று!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.