தேர்தல் பிரசாரத்தில் பணப் பட்டுவாடா! கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

kanimozhi arthi - 2026

தோ்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்தவா்களுக்கு பணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதைத் தொடா்ந்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளா் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக., சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார்.

முன்னதாக, தூத்துக்குடியில் கனிமொழிக்கு வரவேற்பு தெரிவித்து பெண்கள் சிலா் ஆரத்தி எடுக்க, அவா்களுக்கு திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆரத்தி சுத்தும் திறமைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் ரூ. ஆயிரம் ரூ. ஆயிரத்து ஐநூறு என பண நோட்டுகளை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பிரித்து வழங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், திருச்செந்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது பணம் கொடுத்ததாக தேர்தல் பறக்கும்படை தாசில்தார் முத்துராமலிங்கம் திருச்செந்தூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளா் கனிமொழி உள்பட 8 போ் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.