சிவகங்கையில் ஹெச்.ராஜாவுக்காக களத்தில் இறங்கிய திருபுவனம் ராமலிங்கம் மகன்கள்!

ramalingam sons - 2026
திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்ட அமரர் #இராமலிங்கத்தின் மகன்களும் மற்றும் அவரின் உடன் பிறந்த சகோதரர்கள் உறவினர்கள்..,

என் தந்தை கொல்லப்பட்டபோது எந்த உறவும் இல்லாமல் உடனடியாக ஓடோடி வந்தவர் ஹெச்.ராஜா என்று, அவருக்காக தேர்தல் களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்கள் கூறியுள்ளனர்.

ஹெச்.ராஜாவிற்காக களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்களைக் கண்டு, சிவகங்கை மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து அண்மையில் மதவெறியர்களால் கொல்லப்பட்ட திருபுவனம் பாமக நிர்வாகியாக இருந்த ராமலிங்கத்தின் மகன்கள் இருவரும் அவரது உறவினர்களுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் அவர்கள், தங்கள் தந்தை பற்றியும் அவரை எவ்வாறு கொன்றார்கள் என்பது பற்றியும் கூறுகின்றனர். நாங்களும் உங்களைப் போல நடுநிலையாளர்களாகத் தான் இருந்தோம். இப்போது எங்கள் நிலையைப் பாருங்கள் என்று இருவரும் கூறும் போது பலரும் அவர்களது நிலையை நினைத்து மனம் வருந்துகின்றனர்.

தமிழகத்தில் எங்கள் தந்தை கொலை செய்யப்பட்ட போது உடனே ஓடோடி வந்து ஆறுதல் சொன்னவர் ஹெச்.ராஜா. அதுமட்டுமல்லாமல் தேவையான உதவிகளையும் செய்தவர் அவர்தான். எங்களுக்கும் அவருக்கும் இந்து என்பதை தவிர எந்த பந்தமும் இல்லை. ஆனால் தேடி வந்து உதவி செய்தவர், எங்களுக்கு மட்டுமல்ல யார் பாதிக்கப்பட்டாலும் அவர் வருவார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

அவர் வெற்றிபெற்று வந்தால் மட்டுமே இந்துக்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்று  கூறுகின்றனர். அவர்கள் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்ட பொதுமக்கள் பலரும் கண்ணீர் சிந்தியதுடன், சொந்த நாட்டில் இந்துக்கள் அகதிகளாக மாறிவிடக் கூடாது என்ற வேதனையை வெளிப்படுத்துவதையும் காணமுடிந்தது.

இது குறித்து ராமலிங்கத்தின் மகன்கள் கூறியவை…

“எங்களுடைய அப்பா என் கண் முன்னரே வெட்டிக் கொல்லப்பட்டார்.
அதை திசை திருப்ப திமுகவினரும் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள் பலரும் பல வகைகளில் முயற்சி செய்தனர் ஆனால் அவை எதுவும் பலிக்கவில்லை ஆனால் அந்த நேரத்தில் எங்களை முதலில் நேரில் வந்து சந்தித்த நபர் H.ராஜா”.

“அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு அவர் பல உதவிகளை செய்துள்ளார் மேலும் இந்த சம்பவத்தில் திமுகவினர் போன்றோர் எங்களுக்கு எதிரான காரியங்களிலேயே ஈடுபட்டனர்”.

“மேலும் H.ராஜா போன்றோர் மத்திய அமைச்சர் ஆனால் தான் எங்களைப் போன்றவர்களை பாதுகாக்க முடியும் இன்னொரு ராமலிங்கத்தின் குடும்பம் உருவாகும் நிலமை இனி வரக்கூடாது. அதனால் நாங்கள் இந்த முறை பாஜகவை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய களத்தில் இறங்கி முழுமையாக வேலை செய்வோம் எச் ராஜா வை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் வரை ஓயமாட்டோம்” என்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories