ஒரே நாளில் அடையாளத்தில் மாற்றம் பெற்ற சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

centralstaion - 2026

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்பட்ட நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மாற்றம் பெற்றுள்ளன. மேலும், பெயர்ப் பலகைகள் மாற்றப் பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள செண்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றப் பட்டுள்ளது. மத்திய அரசின் உடனடி நடவடிக்கையால், இந்தப் பெயர் மாற்ற உத்தரவு உடனே அமல்படுத்தப் பட்டு, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதை அடுத்து, செண்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப் பலகைகள், பதாகைகள்  உள்ளிட்டவை மாற்றப் பெற்று வருகின்றன. அனைத்திலும் பளிச்சிடும் வண்ணம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதப் பட்டு வருகிறது.

chennai central nameboard - 2026

இதே போல், உள்ளூர் டிக்கெட்கள், செண்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர்கள் கொண்ட டிக்கெட்களில் பெயர் மாற்றப் பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் வழங்கப் படும் டிக்கெட்களில் பெயர் மாற்றப் பட்டுள்ளது.

அதே போல், மற்ற ரயில் நிலையங்களிலும் செண்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வண்டிகள் குறித்த அறிவிப்புகளில், தற்போது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயர் இடம்பெற்றுள்ளது.

கோவை ரயில் நிலையத்தில், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்கான ரயில் குறித்த அறிவிப்பு….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.