
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சுஜா, தற்போது மூன்று தமிழ் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவின்போது அவர் அணிந்திருந்த உடை சமூகவலைத்தளக்களில் சர்ச்சைக்குள்ளானது. இந்த உடை குறித்து ஒருசிலர் ஆபாசமான கமெண்ட்டுக்களை பதிவு செய்திருந்திருந்தனர். இதற்கு சுஜா, தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இதுபோன்று ஆபாச கமெண்ட் பதிவு செய்பவர்களை பார்த்து அஞ்சக் கூடாது. அவர்களை தைரியமாக வெளிக்காட்ட வேண்டும் நான் ஒரு நடிகை. சினிமாவிலும், பொது நிகழ்ச்சிகளிலும் எந்த மாதிரியான உடை அணியவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த ஆடை தான் உங்களுக்கு பிரச்னையா? அப்படியென்றால் சிறு குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகீறார்கள் ஏன்? நாங்கள் பிரச்னை இல்லை. நீங்கள் தான். உங்களது காம வெறி தான் பிரச்னை. இன்டர்நெட் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை மறைத்துக்கொள்ளலாம் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
Not all women are good!
Not all men are bad!!! pic.twitter.com/0zUSG0BXVc
— SUJU (@sujavarunee) April 6, 2018



