கனிமொழிக்கு வாக்களித்து இருக்கன்குடி மாரியம்மன் கோபத்துக்கு ஆளாகாதீர்! வைரல் மீம்ஸ்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

dmk irukkankudi - 2026

பானை தீச்சட்டியை அவமதித்து, திராவிடர் கழகத்தினருடன் இருக்கன் குடி மாரியம்மன் கோவில் புனிதத்தை களங்கப்படுத்தும் வகையிலும், இருக்கன்குடி மாரியம்மனின் பக்தர்கள் வெகு நாட்கள் விரதமிருந்து நம்பிக்கையின் அடிப்படையில் புனிதச் செயலாக தீச்சட்டி எடுப்பதை கேலியும் கிண்டலும் செய்யும் வகையில் தீப்பானையை கையில் எடுத்து அவமதித்துப் பேசிய திமுக., கனிமொழிக்கு உங்கள் வாக்கினை அளிக்காதீர் என்று இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது.

இந்து மத நம்பிக்கைகளைக் கொச்சைப் படுத்தி, ஆன்மிக மரபுகளை அசிங்கப் படுத்தும் விதத்தில் தி.க.,வினரும் திமுக.,வும் பல்வேறு தளன்களில் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

ஆன்மிகவாதிகளை மதிக்காத, அவர்களை கேலியும் கிண்டலும் செய்யக் கூடிய அத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உங்கள் ஆதரவை அளிப்பது, நீங்கள் வணங்கும் தெய்வத்துக்கே இழுக்கு என்று பிரசாரம் இந்த மக்களவைத் தேர்தலில் சூடு பிடித்துள்ளது.

உங்கள் கடவுளை கேலியும் கிண்டலும் செய்து, உங்கள் கடவுளை இழிவு படுத்திப் பேசி, அதன் மூலம் உங்களையே இழிவு படுத்தும் ஒருவருக்கு உங்கள் வாக்குகளை அளிப்பது, உங்களையே நீங்கள் அவமானப் படுத்திக் கொள்வது போலானது என்றும், கடவுள் இல்லை என்பவருக்கு வாக்களித்து விட்டு, அதன் பின்னர் கடவுளே காப்பாற்று கடவுளே காப்பாத்து என்று கூக்குரலிடுவதில் எந்த பலனும் புண்ணியமும் இல்லை என்றும் பிரசாரங்கள் இந்தத் தேர்தலில் தீவிரமாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.