சுங்கச்சாவடி மீது தாக்குதல் … 3 பேர் கைது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

tollplaza attack - 2026

சென்னையில், சுங்கச்சாவடி மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த செங்குன்றம், அருகே நல்லூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், வாகன ஓட்டிகளைத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் ராஜேஷ்ஷாவ், சமீர் கோஷ் வகோஷ் ஆகியோரும், சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கி  கண்ணாடிகளை சேதப்படுத்திய சலீம், பாபு, இளையராஜா ஆகிய மூவரையும் சோழவரம் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் பன்னீர்செல்வத்தின் (வயது 34) வேனில் அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் (27) கிளீனராக உள்ளார். நேற்று காலை தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 25 பணியாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு கவரப்பேட்டை நோக்கி இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

பாடியநல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்றபோது அங்கிருந்த ஊழியர், வரி வசூலுக்கான டோக்கன் வாங்கும்படி கூறினார். அதற்கு டிரைவர் பன்னீர்செல்வம், மாதாந்திர பாஸ் உள்ளதாகக் கூறினார். ஆனால் மாதாந்திர பாஸ் நேற்றுடன் முடிவடைந்துவிட்டதாக கூறி, பணம் கொடுக்கும்படி சுங்கச்சாவடி ஊழியர் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கவுண்ட்டரில் அமர்ந்து இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) உள்ளிட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து வேன் டிரைவர் பன்னீர்செல்வம், கிளனர் ஜேம்ஸ் இருவரையும் தாக்கினராம். இதில் இருவரும் காயம் அடைந்து தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட வலியில் துடித்துள்ளனர்.

இதைக் கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்ததும் இருவரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடிக்கு திரண்டு வந்தனர். இதனால் பயந்துபோன சுங்கச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சுங்கச்சாவடியில் உள்ள 2 கவுண்ட்டர்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் அந்த சுங்கச்சாவடி முன்பு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.