குழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட்! ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா! போலீஸ் கிடுக்கிப்பிடி!

Published:

amutha child traffic - 2026

குழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை; கறுப்பா இருந்தா ஒரு விலை என்று பேசி ஆடியோவில் சிக்கியுள்ளார் நர்ஸ் அமுதா! ஆடியோ வெளியான விவகாரத்தில், உதவியாளர் நர்ஸிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர் போலீஸார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா குழந்தைகளை பணத்துக்கு விற்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை, கறுப்பா இருந்தா ஒரு விலை, அழகா இருந்தா ஒரு விலை, அழகில்லை என்றால் ஒரு விலை, பெற்றோரிடம் கையெழுத்து பெற்றுத் தர தனி விலை என்று பேரம் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த 30 ஆண்டுகளாக இதை செய்து வந்துள்ளதாகவும் ஆண்டவன் புண்ணியத்தில் இதுவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை என்றும் கூறுகிறார். வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது போல் நகராட்சியில் சான்றிதழ் வாங்கித் தரப்படும் என்றும், அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குழந்தை பிறந்ததாக சான்றிதழ் வாங்கித் தரப்படும் என்றும் அதற்கு ஒரு விலை என்றும் கூறுகிறார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

கோர்ட் மூலம் செய்வதாக இருந்தால் ரொம்ப லேட்டாகும் என்றும் கூறியிருக்கிறார். இந்த ஆடியோ விவகாரம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோ…

நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகளை விற்பதாக வெளியான இந்த ஆடியோ விவகாரத்தில், விருப்ப ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் உதவியாளர் அமுதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img