ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க இலங்கையில் தடை!

உலகம் சற்றுமுன்

srilanka parliament - 2026

இலங்கையில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, இலங்கையில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

தொடர்ந்து குண்டுவெடிப்பு பீதி நிலவுகிறது. பலவேறு இடங்களில் வெடிக்காத நிலையில், டெட்டனேட்டர் குச்சிகள், வெடிகுண்டுகள் கண்டறியப் பட்டு செயலிழக்கச் செய்யப் பட்டு வருகிறது. இந்த அளவுக்கு நாட்டில் பரவலாக அங்கங்கே வெடிகுண்டுகளைக் கடத்திச் சென்று வைக்கும் அளவுக்கு பாதுகாப்பில்லாத நிலையிலா இருந்தது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் வான் பரப்பில், ஆளில்லா விமானங்கள், அனைத்து விதமான ட்ரோன் கேமராக்கள் ஆகியவை பறக்க விடுவது தடை செய்யப் பட்டுள்ளது. இதனை சிவில் விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு முதல் இந்தத் தடை அமலுக்கு வந்ததாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.